உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:உதவித்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்ட நோக்கம்

[தொகு]

தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் உதவித் தொகை பெறும் வாய்ப்பு இருந்தால் கூடுதலாக பங்களிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா? எடுத்துக்காட்டுக்கு, சொந்தமாக ஒரு கணினி, திறன் குறைந்த பழைய கணினியை மாற்றி விட்டுப் புதிய கணினி, கட்டுரைகளுக்கான தகவலைச் சேர்ப்பது தொடர்பான செலவுகள் ( நூல் வாங்குதல் / நூலக அணுக்கம் / ஒளிப்பட கருவி வாங்குதல்), மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் மின்கலன் (inverter / UPS) வாங்குதல், மாணவராக இருந்தால் மாதாந்த இணைய அணுக்கச் செலவுகள், விக்கிப்பீடியா தொடர்பான பரப்புரை / மாநாட்டுக்குச் சென்று வரும் செலவுகள் ஆகியன. ஆம் எனில், உங்கள் தேவையைத் தெரிவிக்க முடியுமா?

உண்மையிலேயே சிறப்பாக பங்களிக்கக்கூடியவருக்கு வளங்களுக்கான அணுக்கமின்மை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இது ஒருவரின் பங்களிப்புக்கான பரிசோ சலுகையோ அன்று என்பதால் உண்மையிலேயே தேவை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிப்பது நன்று.

பின்வருமாறு உங்கள் வேண்டுகோளை இடுங்கள்.

==பயனர் பெயர்==

இங்கு பயனர் தன் தேவையை விளக்கி வேண்டுகோள் இட வேண்டும். உத்தேச செலவு, தேவைப்படும் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது உதவும்.

===ஆதரவு===

இங்கு இந்த வேண்டுகோளை ஏற்கும் மற்ற பங்களிப்பாளர்கள் ஆதரவும் கருத்தும் தெரிவிக்கலாம். பயனர் இது வரை அளித்துள்ள பங்களிப்பு, தேவையின் நியாயம், அதற்கு உரிய சரியான செலவு என்ற அடிப்படையில் ஆதரவு இருக்க வேண்டும்.

===மறுப்பு===

இங்கு இந்த வேண்டுகோளை மறுக்கும் மற்ற பங்களிப்பாளர்கள் மறுப்பையும் கருத்தையும் தெரிவிக்கலாம்.

===கருத்து===

இங்கு பொதுவான கருத்துகளை இடலாம்.

மேற்கண்ட உரையாடல், ஆதரவு / மறுப்பு வழங்குவதற்கு இரண்டு வார காலம் தரப்படும். அதன் பிறகு, உரையாடலின் முடிவுக்கு ஏற்ப பயனருக்கான உதவித் தொகையைப் பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்ய முனைவோம்.

நடப்பு வேண்டுகோள்கள்

User:Titodutta Y ஆயிற்று

[தொகு]

நமஸ்கார,
என் பெயர் Tito Dutta. My name is Tito Dutta ([[User:Titodutta][]), mostly active in En WP and Commons/ I am sorry I canot write or read Tamil, but I have great respect fopr the language and culture. I know few Tamil words (those I told to Ravi and few other users at ICC 2014), but sorry I can not read or write Tamil.

Disclaimer: Here I'll not ask any internet recharge or computer hardwares as I don't participate in Tamil WP. I am asking only that wat is needed for my Wikipedia Commons work, and may be helpful for Tamil WP as well.

Requisition

I am requesting these supports:

  • A scanner
I'll not mention any particualr scanner name here. Any good scanner, second hand is also fine, but make sure it actually works.
The cost of the book is INR 500, I can provide scanned copyy of receipt. The book is not available in local library. I don't have membership of RKM, Kolkata.
Works already done in this field
Why do I need it?

For last two years, I have been trying to upload many good old documents but,. if I scan from internet cafes it takes me INR 5 to INR 10 per copy. I regularly need a good scanner to upload scanned photos and documents.

What can Wikipedia Tamil expect from me?

I'll upload 100 or so photos within 2-3 weeks. You can expect 350 media fileswithing first fwe months. I'll keep on uploading more and more photos on regular basis.

Please note

As I mentiined, I need a scanner regularly, so I would not be able to do all works in a particular period (for example, someone says, "take a scanner for two weeks and return after that)

--Titodutta (பேச்சு) 08:54, 8 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Hi :Titodutta, just noticed this request. Besides this not being the appropriate forum for non-Tamil Wikimedia related requests, Tamil Wikipedia doesn't have any fund yet to support such requests. Even the ongoing scholarship for a Tamil Wikimedian is being supported through a temporary arrangement by me. A request to support this is pending with Wikimedia India chapter. When we are revising our current FDC plan, we might have a fund allocated to support requests from all over India. So, I kindly request you to wait until a proper announcement comes from WMIN. It should be done by first week of December 2014. Thanks.--இரவி (பேச்சு) 14:49, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

Scholarship request summary: Request for a data card, sim card and 2 GB per month 3G internet package for 3 months. Estimated cost: 2700 INR

வணக்கம்! தற்போதைய பங்களிப்பில் குறை ஏற்படுவதால், எனது முழுமையான பங்களிப்பை வழங்க அதிக டேட்டா கொண்ட இணைய இணைப்பு தேவைப்படுகிறது.

தற்போதைக்கு 98 ரூபாய் நெட் பேக்கை பயன்படுத்துகிறேன். முன்னர், 98 ரூபாய்க்கு வழங்கப்பட்ட 1 ஜி.பியில் இருந்த டேட்டா, 700 எம்.பி.யாக குறைக்கப்பட்டு, மேலும் படிப்படியாக குறைக்கப்பட்டு 400 எம்.பிக்கு வந்திருக்கிறது. இன்னும் குறையலாம். :( 400 எம்.பி.யைக் கொண்டு முழுமையாக பங்களிக்க முடியவில்லை. ஜாவாஸ்கிரிப்டையும் படங்களையும் முடக்கிப் பயன்படுத்தியே இந்த டேட்டா போதவில்லை. வேகம் சராசரியாக 20kbps இருக்கும்.
ஜாவாஸ்கிரிப்டை முடக்குவதால்:
  • விரைவுப் பகுப்பி இயங்காது

-> நினைவில் இருக்கும் நெருங்கிய பகுப்பை இணைத்துவிடுகிறேன்.

  • விக்கித்தரவை அணுகி பயன்படுத்த முடியாது.

->கட்டுரைகளை பிற மொழிக் கட்டுரைகளுடன் இணைக்க முடிவதில்லை.

  • ஜெயரத்தினாவின் iwt போன்ற கருவிகளோ, js பக்கங்களோ, பிற ஜாவாஸ்கிரிப்ட் செயல்பாடுகளோ இயங்காது.

->கட்டுரையில் உள்ள ஒவ்வொரு உள்ளிணைப்பிற்கும், ஆங்கில கட்டுரைகளை திறந்து பார்த்து இணைக்கிறேன்

  • தொகுப்புப் பெட்டியில் உள்ள எந்த வசதியும் இயங்காது.

-> wikitable உள்ளிட்டவற்றின் code முழுவதையும் மனப்பாடம் செய்தே இட்டு வருகிறேன். ஜாவாஸ்கிரிடை முடக்குவதால் சிலவற்றை பயன்படுத்த முடியவில்லை. சிரமமாக இருக்கிறது.

  • விக்கி autocomplete தேடுபொறி இயங்காது
  • பதக்கங்களை வழங்க இயலாது.
  • விக்கிப் பொதுவகத்திற்கு சென்றாலும், அதை பயன்படுத்த முடியாது.


படங்களை முடக்குவதால்:
  • கட்டுரையில் சரியான படம் இணைக்கப்பட்டிருக்கிறதா என்றே பார்க்க முடியவில்லை!
  • படத்திற்கான ஆங்கிலத் தலைப்பை தமிழாக்கும் போது பிழை ஏற்பட்டு விடுகிறது.
  • பொருத்தமான படத்தை பொதுவகத்தில் தேட முடியவில்லை.

இவற்றை முடக்காமல் பயன்படுத்தினால், வெகு விரைவில் டேட்டா தீர்ந்துவிடும். தற்போதைய வேகத்தில், ஜாவாஸ்கிரிப்டையும், படங்களையும் இயக்கினால், ஒவ்வொரு பக்கம் லோடு ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது.

என்னுடைய சொந்த செலவில் முழுமையாக பங்களிக்க முடியவில்லை. பங்களிப்பில் குறை இருப்பதாக, பல முறை பிற பயனர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, குறைந்தபட்சமாக 100 kbps வேகத்தில், மாதம் முழுவதற்கும் சராசரியாக 800 எம்.பி டேட்டாவைக் கொண்ட இணைய இணைப்பு தேவைப்படுகிறது. பங்களிக்கும் மாதங்களில் மட்டும் இணைய இணைப்பு தேவை. இது ஒரு உத்தேசம் தான். மற்ற பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் டேட்டாவைக் கணக்கிட்டிருந்தால் அதற்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ செலவுக் கணக்குடன், இணைய இணைப்பிற்கான விவரங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன். இணைய இணைப்பை வழங்க உதவுமாறு வேண்டுகிறேன். நன்றி!

ஆதரவு (Support)

[தொகு]

(சூலை 15, 2014 வரை கருத்து தெரிவிக்கலாம்)

  1. தமிழ்க்குரிசில் அண்ணா ஒரு முனைப்பான பங்களிப்பாளர் என்றவகையில் இவருக்கு ஆதரவளிக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:22, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
  2. சிபியைத் தொடர்பு கொண்டு பேசினேன். மாதம் 399 இந்திய உரூபாய் செலவில் 2GB தரவுக்கான 3G இணைய அணுக்கம் (மூன்று மாதங்களுக்கு) - 1197 இந்திய உரூபாய், இணைய அணுக்கம் பெறுவதற்கான data card + sim (ஒரு முறை செலவு) - 1503 இந்திய உரூபாய் (ஏதேனும் மிச்சம் வந்தால் அடுத்த மாத இணைய அணுக்கச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்) என மொத்தம் 2700 இந்திய உரூபாயை உதவித் தொகையாக அளிப்பது பொருத்தமாக இருக்கும். இவ்வசதிகளைப் பெறுவதால் அவர் வரும் மாதங்களில் குறிப்பிட்ட அளவு பங்களிக்க வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லை. இது ஏற்கனவே அவருடைய நற்பங்களிப்பின் அடிப்படையில் அளிக்கப்படுவது. எனினும், மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து உதவித் தொகை பெற விரும்பும் போது கடந்த மூன்று மாதங்களின் பங்களிப்பு நிறைவாக உள்ளதா என்று பார்க்கலாம். இது முதல் உதவித் தொகை விண்ணப்பம் என்பதால் புரிதலுக்காக இதனைக் குறிப்பிடுகிறேன். இத்தொகையை நம்மில் சிலரே பகிர்ந்தளிக்க முடியும் என்றாலும், இதனை ஒரு முறையான திட்டமாக நிறுவி விக்கிமீடியா ஒப்புதல் பெற்றால் மற்ற விக்கிப்பீடியாக்களும் பயன்படுத்தலாம். இன்னும் பலரும் உதவி பெறலாம். இத்திட்டத்தை முன்மொழிந்தேன் என்ற முறையில் உதவித் தொகையைப் பெற்றுத் தருவதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:50, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
  3. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:54, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
  4. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:10, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
  5. --நந்தகுமார் (பேச்சு) 19:27, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
  6. --மணியன் (பேச்சு) 01:23, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]
  7. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:46, 7 சூலை 2014 (UTC)[பதிலளி]
  8. --Kanags \உரையாடுக 10:56, 7 சூலை 2014 (UTC)[பதிலளி]
  9. ----நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:23, 7 சூலை 2014 (UTC)[பதிலளி]
  10. --சிவகோசரன் (பேச்சு) 15:30, 7 சூலை 2014 (UTC)[பதிலளி]
  11. --சரவணன் பெரியசாமி 15:44, 8 சூலை 2014 (UTC)[பதிலளி]
  12. -- மாதவன்  ( பேச்சு  ) 15:53, 8 சூலை 2014 (UTC)[பதிலளி]
  13. உதவ வேண்டிய நிலையில் உள்ளவர். விக்கி உதவ வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:22, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]

மறுப்பு (Oppose)

[தொகு]

(சூலை 15, 2014 வரை கருத்து தெரிவிக்கலாம்)

கருத்து (Comments)

[தொகு]

(சூலை 15, 2014 வரை கருத்து தெரிவிக்கலாம்)

தமிழ்க்குரிசில், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொகுக்க விரும்புகிறவர்களுக்கு இலவச கணினி, இணைய வசதி வழங்குகிறோம் என்று உறுதி அளித்திருந்தார்கள். தற்போது நீங்கள் இருக்கும் வீட்டில் இருந்து த. இ. க. சென்று இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு ஒத்து வருமா? இல்லையெனில், நீங்கள் தற்போது இருக்கும் வீட்டில் நிலவழி இணைய இணைப்பைப் பெற்றுக் கொண்டு பங்களிப்பதற்கு விரும்புகிறீர்களா? ஆம் எனில், இதற்கான உதவியைப் பெற முனைவோம். இல்லை, கம்பியில்லா இணைய இணைப்பு தான் ஒத்து வரும் என்றால் அதற்கான செலவுக்கு உதவி பெறுவோம். த. இ. க. வசதி ஒரு தகவலுக்கே. அங்கு செல்லா இயலா நாட்களிலும் மாலை நேரங்களிலும் கூட உங்களுக்கு இணைய அணுக்கம் தேவைப்படும் என்பதை உணர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:43, 1 சூலை 2014 (UTC)[பதிலளி]

த.இ.காவிற்கு (பாதுகாப்புக்கு உட்பட்ட, செல்லக்கூடாத) குறுக்கு வழியில் சென்றால் 4.8 கி.மீ. 5.5 கி.மீ தொலைவு கொண்ட பாதையில் மிதிவண்டியில் செல்ல இயலும். அடிக்கடி செல்வதோ, இரவு நேரங்களிலோ பயன்படுத்துவதோ முடியாது. வீட்டில் இருந்து பங்களிப்பது போல் இருக்காது. :( கம்பியில்லாத இணைய இணைப்பே வசதியானது. வேறு இடங்களுக்கு சென்றாலும் பயன்படுத்திக் கொள்ள இயலும்.
28 நாட்களுக்கு செல்லுபடியாகக் கூடிய 255 ரூபாய் மதிப்புள்ள 1.25 ஜி.பி பிளானோ, அல்லது 399 ரூபாய் மதிப்புள்ள 2 ஜி.பி பிளானோ பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் மூன்று மாதங்கள் வரை தேவைப்படுகிறது. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:24, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி, தமிழ்க்குரிசில். உங்கள் விண்ணப்பத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 09:06, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே உங்கள் ஆதரவை ஆதரவு பகுதியினுள் இட்டுவிடுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:23, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

நான் பயன்படுத்தும் பயர் பாக்சு உலாவியில் நோ இசுக்ரிப்டு (NoScript ) என்னும் Addonஐ பயன்படுத்துகிறேன். இதனால் வேண்டும்போது யாவா இசுக்ரிப்டை நிறுத்தவும் பயன்படுத்தவும் இயலும்.--மணியன் (பேச்சு) 01:33, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

என் கணினியை வாங்கி மூன்றாண்டுகள் ஆயிற்று. கடந்த சில மாதங்களாக அடிக்கடி இயங்குதளப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இப்போது தான் சிக்கல் தீர்ந்தது. :) என்னிடம் எந்த மென்பொருளும் இல்லை. என் நண்பன் எனக்கு கூகுள் குரோம், வியெல்சி பிளேயர் மட்டும் தந்தான். வேறு வழியில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:15, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]
இற்றை

இந்திய விக்கிமீடியா கிளையிடம் இந்த உதவித் தொகை திட்டம் குறித்து தெரியப்படுத்தி உள்ளேன். கருத்தளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக அலுவல் முறையிலான ஒப்புதலும் உதவித் தொகையும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 06:15, 9 சூலை 2014 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசிலுக்கான உதவித்தொகை தொடர்பாக ஆதரவு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்திய விக்கிமீடியா கிளையிடம் இந்த உதவித் தொகையை எதிர்பார்த்திருக்கும் அதே வேளை, தமிழ்க்குரிசிலுக்கு ஆர்வமும் நேரமும் இருக்கும் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே தேவையான கருவி, இணைய இணைப்பைப் பெற வழி செய்துள்ளேன். முறையாக உதவித் தொகை கிடைத்த பிறகு இதற்கான செலவை நேர் செய்து கொள்வது என் பொறுப்பு. இந்த உதவியின் மூலம் கடந்த சில நாட்களாக மிக முனைப்பான பங்களிப்பை நல்கி வரும் தமிழ்க்குரிசிலுக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:59, 25 சூலை 2014 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:18, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:18, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]

விளைவு

[தொகு]

உதவித் தொகை பெற்ற காலத்தில் தமிழ்க்குரிசிலின் தொகுப்புகள்.

எண் பயனர்/ஐ.பி. புது தொகு வழி படி வார் பகு இதர மொத்தம் பைட்
1 13-07-2014 முடிந்த வாரம் 53 66 16 0 6 4 75 220 306167
2 20-07-2014 முடிந்த வாரம் 141 134 52 0 43 23 126 519 512705
3 27-07-2014 முடிந்த வாரம் 68 63 7 2 21 4 68 233 305684
4 03-08-2014 முடிந்த வாரம் 86 124 18 0 5 3 79 315 251138
5 10-08-2014 முடிந்த வாரம் 12 89 3 3 2 2 62 173 52934
6 17-08-2014 முடிந்த வாரம் 36 111 11 2 6 8 74 248 111604
7 24-08-2014 முடிந்த வாரம் 31 60 11 1 3 11 37 154 127069
8 31-08-2014 முடிந்த வாரம் 14 98 11 5 2 7 23 160 98324
9 07-09-2014 முடிந்த வாரம் 34 69 10 0 2 5 27 147 147474
10 14-09-2014 முடிந்த வாரம் 33 57 8 0 2 12 19 131 80027
11 21-09-2014 முடிந்த வாரம் 12 49 12 0 0 9 4 86 47414
12 28-09-2014 முடிந்த வாரம் 15 21 5 0 1 2 3 47 35096
13 05-10-2014 முடிந்த வாரம் 13 29 9 0 5 3 9 68 43173

Impact (English Version)

[தொகு]
Week Period New Edits Redirects Images Tenplates Cats Other Total Bytes
1 Week ending 13-07-2014 53 66 16 0 6 4 75 220 306167
2 Week ending 20-07-2014 141 134 52 0 43 23 126 519 512705
3 Week ending 27-07-2014 68 63 7 2 21 4 68 233 305684
4 Week ending 03-08-2014 86 124 18 0 5 3 79 315 251138
5 Week ending 10-08-2014 12 89 3 3 2 2 62 173 52934
6 Week ending 17-08-2014 36 111 11 2 6 8 74 248 111604
7 Week ending 24-08-2014 31 60 11 1 3 11 37 154 127069
8 Week ending 31-08-2014 14 98 11 5 2 7 23 160 98324
9 Week ending 07-09-2014 34 69 10 0 2 5 27 147 147474
10 Week ending 14-09-2014 33 57 8 0 2 12 19 131 80027
11 Week ending 21-09-2014 12 49 12 0 0 9 4 86 47414
12 Week ending 28-09-2014 15 21 5 0 1 2 3 47 35096
13 Week ending 05-10-2014 13 29 9 0 5 3 9 68 43173

நீட்டிப்பு

[தொகு]

இந்த திட்டைத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உதவினால், தடையற்ற பங்களிப்பை வழங்க ஏதுவாக இருக்கும். போதிய நிதி வசதி இல்லாததால் உதவி கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தயைகூர்ந்து உதவுக. நன்றி! - தமிழ்க்குரிசில் 12 அக்டோபர் 2014

குறிப்பு: அடுத்த மூன்று மாத இணையச் செலவுக்கான தொகை: 3*399 = 1,197 இந்திய உரூபாய்--இரவி (பேச்சு) 07:21, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆதரவு

[தொகு]
  1. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவித் தொகையை அளித்திருந்தாலும், தமிழ்க்குரிசிலின் கடந்த மூன்று மாதப் பங்களிப்புகள் மிகச் சிறப்பாக உள்ளன. (நடுவில் பணிக்குச் சென்று விட்டார் என்பதால் பங்களிப்புகள் சற்று குறைந்தன். இல்லாவிட்டால், இன்னும் பன்மடங்கு பங்களிப்புகள் கிட்டியிருக்கும்!) இதனை முன்மாதிரியாக வைத்து இந்தியா முழுமைக்கும் இது போன்ற திட்டத்தை முன்னெடுக்க எண்ணியுள்ளேன். முழு ஆதரவு. --இரவி (பேச்சு) 07:21, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  2. மிகவும் பயனுள்ள விதத்தில் கிடைத்த உதவித்தொகை கொண்டு பங்காற்றிய தமிழ்க்குரிசிலுக்கு பாராட்டுக்கள் ! அவரது நடத்தை மூலம் மற்றவர்களுக்கும் விரிவுபடுத்த ஊக்கம் அளித்துள்ளார். வாழ்க! வளர்க அவர்தம் பணி ! முழு ஆதரவு.--மணியன் (பேச்சு) 07:53, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Info-farmer (தகவலுழவன்)

[தொகு]

அறிமுகம்: நான் தகவலுழவன் ! நான் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக (2008 முதல்) விக்கிமீடியத்திட்டங்களில் பங்களிப்பு செய்து வருகிறேன்.எனது அனைத்து விக்கிப்பங்களிப்புகளையும், இவ்விணைப்பில் காணலாம். மேலும், நூலகம், கணியம் போன்ற பிற திட்டங்களிலும் நான் பங்களிப்பதுண்டு. இந்திய அளவில் நடைபெற்ற 3பயிலரங்குகளிலும், கருத்தரங்களிலும், தமிழக அளவில் நடைபெற்ற இணையத்தமிழ் கருத்தரங்குகள், நான்கிலும் கலந்து கொண்டுள்ளேன். இத்தகைய ஈடுபாடு என்னுள் ஏற்பட்டமைக்குக் காரணம், விக்கிமீடியா வழி எனக்குக் கிடைத்த நண்பர்களே ஆவர். அந்நண்பர்களிடம் என்னை அடையாளப்படுத்தியது இரவியே. சிலருக்கு அவர்கள் உதவினாலும், நான் ஒருவனே, தொடர்ந்து அந்நண்பர்களிடம் பல்வேறு நிரல் சார்ந்த உதவிகளையும் பெற்று வளர்ந்து வருகிறேன். அதோடு அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு கணினியை, நான் எனது இல்லத்தில் இருந்து செயற்பட வாங்கி அன்பளிப்பாக அளித்தனர். மேலும், சில நண்பர்கள் எனது குடும்ப சூழ்நிலையிலும், பொருளாதார ஆதரவு அளித்துள்ளனர். பல்வேறு மனஅழுத்தத்தில் நான் இருப்பினும், அவர்களின் அன்பு, அக்கரை என்னை இங்கேயே வட்டமடிக்க செய்தது. இருப்பினும், அக்கணினியின் இயக்கம், தற்போது சரியில்லை. ஏனெனில், என் வாழிடத்தில், அடிக்கடி ஏற்படும் மின்அழுத்த மாற்றம் காரணமாகவும், எனது பணியிட வெப்பம் காரணமாகவும், அது முன்பு போல செயற்படுவதில்லை.

கோரிக்கை: எனவே, தற்போது தொடர்ந்து செயற்படவும், இந்திய அளவில் விக்சனரி திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், பிற நுட்பவியல் கலந்தாய்வில் பங்கு கொள்ள இருப்பதாலும், பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளேன். விக்கிமட்டும் அல்லாது திறநிலை/கட்டற்ற மென்பொருள் திட்டங்களிலும், தமிழ் மொழி சார்ந்து மொழியியல் கணியநுட்பங்களையும் ஈடுபாடு கொண்டுள்ளதால், பல நுட்பவியலாளர்களை சந்திக்கும் போது, திரைநிகழ்பட பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். அப்பொழுது தான் அந்த அனுபவங்களை, நம் தமிழ் விக்கிமீடியா சமூதாயத்திற்கு கொண்டு வர இயலும். ஏனெனில், புதிய அனுபவங்களை திரும்ப திரும்ப பார்க்கும் போதே, பயிலும் போதே அதனை மேம்படுத்திக் கொள்ள முடியும். பிறக்கும் எளிமையாக்கி என்றும் தர, திரைநிகழ்பட பாடங்களை உருவாக்க இயலும். இதற்கென விக்கி விளக்கு என்ற திட்டத்தை செயற்படுத்த உள்ளேன். அதோடு விக்சனரிக்கென்று பல வசதிகள் தேவைப்படுகின்றன. அவற்றையும் உருவாக்க வேண்டும். எனவே, எனக்கு ஒரு மடிக்கணினி வேண்டும். அது இந்தியவிக்கிமீடியாவின் இம்முறை வழியேப் பெற உங்கள் ஆதரவு வேண்டும். எனவே, உங்கள் ஆதரவினையும், கருத்தினையும் தருக. வணக்கம்.--உழவன் (உரை) 17:23, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஆதரவு (Support)

[தொகு]
  1. தமிழ் விட்சனரித் திட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருபவர். தமிழ்ப் பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுதிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 18:22, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
  2. --நந்தகுமார் (பேச்சு) 18:26, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
  3. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:45, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
  4. வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 22:52, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
  5. ஆதரவு. --AntanO 00:49, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  6. ஆதரவு - விக்சனரி தேங்கிவிடாமல் இருக்க தகவலுழவனுக்கு ஆதரவு. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:57, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  7. ஆதரவு - கி.மூர்த்தி (பேச்சு)
  8. வாழ்த்துகள் & ஆதரவு --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:38, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  9. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:40, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  10. --சண்முகம்ப7 (பேச்சு) 04:02, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  11. --சோடாபாட்டில்உரையாடுக 04:25, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  12. --Surya Prakash.S.A. (பேச்சு) 04:49, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  13. வாழ்த்துகளும் ஆதரவும் --மணியன் (பேச்சு) 12:16, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  14. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:37, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  15. -- ஆதரவு - மயூரநாதன் (பேச்சு) 13:15, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  16. ஆதரவு. சுந்தர் \பேச்சு 16:23, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  17. வாழ்த்துகளும் ஆதரவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:57, 5 சூலை 2015 (UTC)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:57, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
  18. ஆதரவு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:38, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  19. வாழ்த்துகள்! --Chandravathanaa (பேச்சு) 04:52, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  20. ஆதரவு.--Commons sibi (பேச்சு) 08:37, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  21. ஆதரவு. appswiki தொகுப்பானைப் பலரிடம் கொண்டுசென்ற இவரின் உழைப்பு அபாரமானது --நீச்சல்காரன் (பேச்சு) 10:56, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  22. நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். மின்னூலாக்கத்திலும் பங்களித்துள்ளார். அவ்வகையில் பலவிதமான தமிழ் சார் செயற்பாடுகளில் ஈடுபட இவருக்கான வசதிகள் வழங்கப்படுவது பொருத்தமானதே. கோபி (பேச்சு) 11:05, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  23. ஆதரவு --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:08, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  24. --Natkeeran (பேச்சு) 13:15, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  25. ஆதரவு! தமிழ் விக்சனரித் திட்டங்களில் முனைப்போடு பங்காற்றியமைக்கும், திட்ட முன்னெடுப்புகளை வைத்து செயல்படுத்தியமைக்கும், விக்கி கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தமைக்கும் நன்றி. தேவையான வசதிகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பை செவ்வனே செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். உங்கள் கோரிக்கையை வழிமொழிகிறேன் :P வாழ்த்துக்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:24, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  26. ஆதரவு. இது இவரது விக்கிப் பணிகளுக்கு பெரும் ஊக்கமாகவும் தொடர் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் இருக்கும். --Tshrinivasan (பேச்சு) 21:55, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
  27. ஆதரவு.--Booradleyp1 (பேச்சு) 13:36, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
  28. ஆதரவு. விக்கிபீடியாவில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துவைப்பவர்களில் இவரும் ஒருவர். விக்கியில் நான் தொடர்ந்து எழுத ஊக்கமளிப்பவர். எதிர்மறைக் கருத்துக்கள் எதுவுமின்றி ஊக்கம் தருபவர். உரிய வசதிகள் வழங்கப்படுவதன்மூலம் இவர் மென்மேலும் பணியாற்ற வாய்ப்புண்டு. இவரது முயற்சிக்கு ஆதரவும், வாழ்த்தும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:06, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  29. மிகச்சிறந்த ஊக்கமாகவிருக்கும். பல்லாண்டுகளாக இடைவிடாது உழைத்து வருபவர். வலுவாக ஆதரிக்கின்றேன். --செல்வா (பேச்சு) 03:16, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  30. கோடி ஆதரவுகள்!!. தமிழ் விக்சனரியின் மாபெரும் தூண். இவரது கடுமையான அயராத உழைப்பை நன்கறிவேன்.--சி.செந்தி (உரையாடுக) 05:24, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  31. ஆதரவு --Sengai Podhuvan (பேச்சு) 10:13, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  32. ஆதரவுபயனர்:செம்மல்50--Semmal50 (பேச்சு) 15:17, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  33. ஆதரவு - இது இவரைப் போன்ற முனைப்பான தன்னார்வலர்களுக்கு சிறந்த ஊக்கமாகவிருக்கும். --Mugunth (பேச்சு) 01:14, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  34. ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 10:13, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  35. ஆதரவு - பிற மொழி விக்சனரியினருக்கும் முன்னோடிாக இவர் செயல்பட்டதை நன்கறிவேன் --ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:08, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  36. ஆதரவு -- பரிதிமதி (பேச்சு) ) 08:25, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]
  37. ஆதரவு -- இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல பேர்களை விக்கியில் ஊக்குவிப்பதால் எனது ஆதரவு பாலாஜி (பேச்சு) 07:34, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]
  38. ஆதரவு -- பயனர்:Thamizhpparithi Maari
  39. --Joshua-timothy-J (பேச்சு) 13:02, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]
  40. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:06, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  41. வாழ்த்துகளும் ஆதரவும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:15, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]
  42. வாழ்த்துகளும் ஆதரவும். தமிழ் விக்சனரியில் இவரைவிட முனைப்பாகப் பணியாற்றியவர் இல்லை.--−முன்நிற்கும் கருத்து Pazha.kandasamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
  43. --- வாழ்த்துகள் & ஆதரவு --- பயனர்:TRYPPN
  44. --Titodutta (பேச்சு) 16:48, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மறுப்பு (Oppose)

[தொகு]

கருத்து (Comments)

[தொகு]
  1. த. உழவன், அனைவரின் ஒருமித்த ஆதரவைக் காண மகிழ்ச்சி. விக்கிச்சமூகத்தின் கருத்தறிய இந்த வாக்குகளே போதுமானது. அடுத்து விக்கிமீடியா இந்தியா பக்கத்தில் முறையான விண்ணப்பம் இட்டுத் தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:52, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
    • //15நாட்கள் இவ்வாகிடல் நடைபெற வேண்டும் //என்ற பொது விதிக்கேற்ப காத்திருக்க விரும்புகிறேன். பின்னாளில், நம் தமிழ் விக்கமீடியா நடைமுறை குறித்து, பிறர் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதால் இது அவசியமன்றோ?. வணக்கம்.--உழவன் (உரை) 01:45, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
@Ravidreams and Info-farmer: 15 நாள்கள் ஆகிவிட்டன. --மதனாகரன் (பேச்சு) 18:16, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
நினைவூட்டலுக்கு நன்றி. உரிய கணினியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக த. உழவடனுடன் உரையாடி வருகிறேன். விரைவில் இவ்விண்ணப்பத்தை நிறைவேற்றிவிட்டு இங்கு அறியத்தருகிறோம்.--இரவி (பேச்சு) 18:27, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]

இற்றை (Update)

[தொகு]

ஆகத்து 8, 2015 அன்று சென்னையில் வைத்து, தகவல் உழவன் கோரிய Lenovo IdeaPad Flex 14 மடிக்கணினியை (49,000 இந்திய உரூபாய் மதிப்பிலானது) தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக அவரிடம் ஒப்படைத்தோம். நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு இது தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் பயன்பாட்டுக்கு உரித்தான விக்கிமீடியா இந்தியாவின் உடைமையாக இருக்கும். தகவல் உழவன் விரும்பிய போதோ தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் இருக்கும் போதோ விக்கிமீடியா இந்தியா கோரும்போதோ வேறு ஒரு பங்களிப்பாளரிடம் இக்கணினியை ஒப்படைக்கலாம். தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட தகவல் உழவனுக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 10:27, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:42, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:20, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 12:23, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:53, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
    1. எனது விருப்பத்திற்கு ஏற்ப, அக்கணினியை, இந்திய விக்கிமீடியாவின் உடைமை என அனைவரிடமும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இரவி. வழமையான நமது விக்கிமீடியச் சமூக முன்னேற்ற முடிவுடன், எப்பொழுதும் அணியமாக இருப்பேன்.
    2. அதில் வின்டோசு(8) இயக்குதளம் தான் இயல்பிருப்பாக பயன்படுத்த வேண்டும் Lenovo வற்புறுத்துகிறது. மேலும், அதனின் மென்பொருளை தொடர்ந்து இற்றைப்படுத்த அதனை பதிவுசெய்ய வேண்டும் என்கிறது. அது குறித்து விவரம் தெரிந்தவர்கள், அத்தகைய விதிகளை ஏற்க உடன்பாடு இருப்பின், அதில் ஏற்படுத்திக் கொள்ளவும். அதற்காக நான் யாரை சந்திக்கவும் அணியமாக உள்ளேன். ஏனெனில், அக்கணினியைத் தவிர, அதனின் வேறு எந்த விற்பனை ஆவணத்தினையும் நான் பெறவில்லை. கேட்க மறந்து விட்டேன். எனவே, அதனையும் உரிய ஆவணம் செய்யக் கோருகிறேன்.
    3. மேலும், நான் இதுபோன்ற விற்பனை நிறுவனங்களின் விதிகளை ஏற்பதில்லை. ஏனெனில், நான் கட்டற்ற கணிய நிரல்களை மட்டுமே ஏற்பவன். எனது / எங்களது உடைமை மீது, பணம் வாங்குபவர் இடும் கட்டுப்பாட்டை, நான் வழமையாக ஏற்பது இல்லை. இது அடிமைத்தனம் என்பது எனது முடிவான எண்ணம். அதனால் சில மாற்றங்களை கொடுக்கப்பட்ட கணினியில் செய்ய உள்ளேன். அதற்கு எனக்கு 50 GBs போதும். (அதனின் வன்தட்டு 500 GBs. ஆகும்.) இதுகுறித்த விரிவான விளக்கத்தினை பிறர் கேட்டால் தருவேன். வணக்கம்.--உழவன் (உரை) 10:24, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
      இரண்டாம் நிலை இயங்குதளமாக மற்றைய இயங்குதளத்தை நிறுவியும் பயன்படுத்தலாம் (கூடுதலான இடம் உள்ளதால்). சில நிறுவனங்கள் மென்பொருள் நம்புறுதியை (Warranty) வழங்குவதுண்டு. அவ்வாறு இருந்தால், பதிவு செய்வது நன்று. கணினியில் மென்பொருட் சிக்கல் ஏற்படுமிடத்து, மீண்டும் விண்டோசை நிறுவுவதற்குத் தேவையான தொடரிலக்கம் பொதுவாகக் கணினியின் பின்புறம் இருக்கும். அதனையும் குறித்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 10:47, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
      இதுகுறித்து விரிவான் பக்கமொன்றில் தெரிவிப்பேன். எனினும், இதனைக் காணவும். இங்கு வேண்டாம். நுட்பமான அடிமையாக்கம். அதனை வேரறுத்து செயற்படுவேன். விரிவான விளக்கம் தேவையெனில் எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் 90 95 34 33 42 அல்லது மின்னஞ்சல்.--உழவன் (உரை) 11:13, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
      மேற்கூறியது எனது பரிந்துரையே. மேற்கூறிய கணினி விக்கிமீடியா இந்தியாவின் உடைமையாக இருப்பதால் கணினியின் இயல்புநிலையான காப்புப் (Backup) படி விக்கிமீடியா இந்தியாவிடம் இருப்பது நன்று. கட்டற்ற மென்பொருள்களைப் பதிலீடு செய்வது உங்கள் தனிப்பட்ட உரிமை. மேற்கூறிய நுட்ப அடிமைத்தனம் தொடர்பான உங்கள் கொள்கையுடன் எனக்கு முரண்பாடு உண்டு. அது தொடர்பில் இங்குக் கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுடையவர்கள் விக்கிப்பீடியாவில் ஒன்றிணைந்து பணியாற்றுவது போன்றதே இதுவும். --மதனாகரன் (பேச்சு) 11:29, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன், கணினி புதிதாக வாங்கியது என்பதால் அதில் காப்புப் படி எடுக்க என்று ஒன்றும் இல்லை. விண்டோசு நீக்கிய கணினியைக் கடையில் வாங்குவது சிரமமாக இருந்ததால் அதனுடன் சேர்த்தே வாங்கி விட்டோம். முறைப்படி வாங்கிய கணினி என்பதால் எப்போது வேண்டுமானாலும் தேவைப்பட்டால் விண்டோசு நிறுவிக் கொள்ளலாம். தகவல் உழவன் தாராளமாக கட்டற்ற மென்பொருளை மட்டும் கொண்டிருக்கும் கணினியை மட்டும் பயன்படுத்தலாம். அது விக்கிமீடியா கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஒத்துப்போவதும் கூட. --இரவி (பேச்சு) 12:24, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
கணினியின் தொடக்க ஏற்றியில் மாற்றம் செய்வதாக இருந்தாலும் என்றே (இலிபர்பூட்டின் இணைப்பைத் தந்தபடியால்), இதனைக் குறிப்பிட்டேன். இயங்குதளத்தை மாற்றுவது ஒரு சிக்கலே இல்லை. கணினியில் ஏதும் பாரிய சிக்கல் ஏற்படும்போது இயல்புநிலை BIOS தேவைப்படுமிடத்து, ஒரு முற்காப்பு நடவடிக்கையாகவே இதனைக் குறிப்பிட்டேன். --மதனாகரன் (பேச்சு) 13:01, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் , ஓ, சரி :)--இரவி (பேச்சு) 13:18, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]